Teacher’s Day Celebration 2022 at The Spastic Society

திருச்சி , ரிவைவல் நகர் , ஸ்பாஸ்டிக் சொசைட்டியில் நடைபெற்ற இன்றைய ( 09-09-2022) ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..
நமது கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் உளமகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

2024-2025 RID 3000 Governor Elect Rtn.Raja Govindasamy at The Spastic Society

2024-25 க்கான நமது மாவட்டம் 3000 த்தின் ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
ஸ்பாஸ்டிக் சொசைட்டி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் ரொட்டேரியன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மனிதர்களிடத்தே காணப்படும் குறைபாடுகளை களைந்து மகிழ்ச்சியாக வாழும் வழியை அற்புதமாக எடுத்துரைத்தார்.

சிறப்பு பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் தனது பேச்சின் மூலம் அருமையாக தொடர்பு கொண்டு சிரிக்க வைத்து மகிழ்ச்சி கொள்ள வைத்து மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டி இருக்கிறார்..

அவர் ஸ்பாஸ்டிக் சொசைட்டியை பார்வையிட்டு எமது ரோட்டரி கிளப் ஆப் ஜம்புகேஸ்வரம் கொடையளித்த ஸ்மார்ட் டிவியை திறந்து வைத்து.. டைரக்டர் திரு சாந்தகுமார் அவர்களிடம் பள்ளியின் செயல்பாடுகளை கேட்டறிந்து பின்னர் கிளப்பின் அனைத்து உறுப்பினர்களுடனும் அருமையாக அளவளாவி ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கான ரோட்டரி கிளப் ஆப் ஜம்புகேஸ்வரத்தின் பல ஆண்டு சேவையை பாராட்டி.. இது தொடர வேண்டும்.. வளர வேண்டும் இதற்கு தானும் உறுதுணையாக இருப்பதாக கூறிச் சென்றது.. ஒரு கவர்னரின் வருகையும் அவரின் கருத்தாழமிக்க பார்வையும்.. ஸ்பாஸ்டிக் சொசைட்டி போன்ற சேவை நிறுவனத்திற்கும் அதற்காக தொடர்ந்து தொண்டாற்றும் ரோட்டரி கிளபிற்கும் அளப்பரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்து கிளப் துடிப்புடன் பணியாற்றுவதற்கு பேருதவியாக விளங்கும் என்பது தெளிவாகிறது.

Participants of Teacher’s Day at The Spastic Society

RC Jambukeshwaran Team wth Teachers of Spastic Society

RC Jambukeshwaran Team
Rotary Prayer
Teacher’s day at The Spastic Society

இந்த ஆசிரியர் தின விழாவிற்கு இத்தகைய கவர்னர் அவர்களை அழைக்க வேண்டும் என்ற ஆலோசனையை கிளப்பிற்கு வழங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்த நமது கிளப்பின் முன்னாள் தலைவர் மற்றும் District Secretary Governor Official Visit Rtn அப்பாஸ் மந்திரி அவர்களுக்கு சிறந்த பாராட்டுக்கள்.

இது போன்ற நிகழ்வுகளால் கிளப் வலுவாகிறது.. மென்மேலும் வளர்ச்சிப் படிகளில் முன்னேறிச்செல்கிறது.
👍🙏💐
வாழ்த்துக்களுடன்,
Rtn Er Paranjabey,
Literacy Chairman,
RC of Jambukeshwaram.
District Chairman – Rotary News.
Trichy.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *